×

الأنفال

வசனம் 33

அல்-முக்தஸர்

وَمَا كَانَ ٱللَّهُ لِيُعَذِّبَهُمْ وَأَنتَ فِيهِمْ ۚ وَمَا كَانَ ٱللَّهُ مُعَذِّبَهُمْ وَهُمْ يَسْتَغْفِرُونَ ﴿٣٣﴾

முஹம்மதே!- நீர் அவர்களிடையே இருக்கும் வரை அல்லாஹ், உமது அழைப்பை ஏற்றுகொண்ட அல்லது ஏற்றுக்கொள்ளாத உம் சமூகத்தை அடியோடு அழித்துவிடும் தண்டனையை வழங்கமாட்டான். அவர்களிடையே உம் இருப்பு அவர்களுக்குப் பாதுகாப்பாகும். அவர்கள் தங்களின் பாவங்களுக்கு பாவமன்னிப்புக் கோருபவர்களாக இருக்கும் வரை அல்லாஹ் அவர்களை அழித்துவிட மாட்டான்.