×

الأنفال

வசனம் 26

அல்-முக்தஸர்

وَٱذْكُرُوٓا۟ إِذْ أَنتُمْ قَلِيلٌ مُّسْتَضْعَفُونَ فِى ٱلْأَرْضِ تَخَافُونَ أَن يَتَخَطَّفَكُمُ ٱلنَّاسُ فَـَٔاوَىٰكُمْ وَأَيَّدَكُم بِنَصْرِهِۦ وَرَزَقَكُم مِّنَ ٱلطَّيِّبَـٰتِ لَعَلَّكُمْ تَشْكُرُونَ ﴿٢٦﴾

நம்பிக்கையாளர்களே!- நீங்கள் மக்காவில் குறைவான எண்ணிக்கையினராக, மக்காவாசிகள் உங்களை பலவீனர்களாகக் கருதி அடக்குமுறைக்குட்படுத்தி உங்கள் எதிரிகள் திடீரென உங்களைத் தாக்கலாம் என நீங்கள் அஞ்சுபவர்களாக இருந்த சந்தர்ப்பத்தை நினைத்துப் பாருங்கள். அப்போது அல்லாஹ் உங்களுக்கு மதீனாவில் அடைக்கலம் அளித்தான். பத்ருப் போர் போன்ற போர்களில் எதிரிகளுக்கு எதிராக உங்களுக்கு உதவி செய்து உங்களைப் பலப்படுத்தினான். தூய்மையானவற்றை உங்களுக்கு வழங்கினான். அவற்றில் நீங்கள் உங்கள் எதிரிகளிடமிருந்து கைப்பற்றிய போர்ச் செல்வங்களும் அடங்கும். அல்லாஹ் அருட்கொடைகளை உங்களுக்கு இன்னுமின்னும் அதிகரிப்பதற்காக அவைகளுக்காக அவனுக்கு நீங்கள் நன்றி செலுத்தி அவற்றுக்கு நன்றி கெட்டத்தனமாக நடக்கக் கூடாது என்பதற்காகவே மேற்கூறியவற்றை அல்லாஹ் உங்களுக்கு வழங்கினான். நன்றி கெட்டத்தனமாக நடந்துகொண்டால் உங்களுக்கு வழங்கிய அருட்கொடைகளைப் பறித்து உங்களை வேதனையில் ஆழ்த்திடுவான்.