அல்-முக்தஸர்
يَـٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓا۟ أَطِيعُوا۟ ٱللَّهَ وَرَسُولَهُۥ وَلَا تَوَلَّوْا۟ عَنْهُ وَأَنتُمْ تَسْمَعُونَ ﴿٢٠﴾
அல்லாஹ்வை உண்மைப்படுத்தி அவனுடைய தூதரைப் பின்பற்றியவர்களே! அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கட்டுப்படுங்கள். அவனுடைய வசனங்கள் உங்களிடம் எடுத்துரைக்கப்படுவதை செவியேற்றுக் கொண்டே அவன் கட்டளைக்கு மாறாகச் செயல்பட்டு, அவன் தடுத்துள்ளவற்றைச் செய்து அவனைப் புறக்கணித்துவிடாதீர்கள்.