×

الأنفال

வசனம் 1

அல்-முக்தஸர்

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَـٰنِ ٱلرَّحِيمِ يَسْـَٔلُونَكَ عَنِ ٱلْأَنفَالِ ۖ قُلِ ٱلْأَنفَالُ لِلَّهِ وَٱلرَّسُولِ ۖ فَٱتَّقُوا۟ ٱللَّهَ وَأَصْلِحُوا۟ ذَاتَ بَيْنِكُمْ ۖ وَأَطِيعُوا۟ ٱللَّهَ وَرَسُولَهُۥٓ إِن كُنتُم مُّؤْمِنِينَ ﴿١﴾

தூதரே!- உம்முடைய தோழர்கள் போர்ச் செல்வங்களைக் குறித்து - அவற்றை எவ்வாறு பங்கிட்டீர்கள்? யாருக்கெல்லாம் வழங்குவது? என்று கேட்கிறார்கள். -தூதரே!- நீர் அவர்களின் கேள்விக்கு பதிலாக கூறுவீராக: “போர்ச் செல்வங்கள் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் உரியன. அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே அவற்றை வழங்குவார்கள்; பங்கிடுவார்கள். முழுமையாக அடிபணிவதே உங்கள் மீதுள்ள கடமையாகும். நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி அவனை அஞ்சுங்கள். உங்களிடையே காணப்படும் பிரவினையையும் விரோதத்தையும் அன்பால், அழகிய பண்பால், மன்னிப்பால் சீர்படுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் உண்மையில் நம்பிக்கையாளர்களாக இருந்தால் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கட்டுப்படுங்கள். ஏனெனில் ஈமான் அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுவதற்கும் பாவங்களை விட்டு விலகியிருப்பதற்கும் தூண்டுகிறது. இக்கேள்வி பத்ருப் போருக்குப் பின் கேட்கப்பட்டதாகும்.