×

الأعراف

வசனம் 99

அல்-முக்தஸர்

أَفَأَمِنُوا۟ مَكْرَ ٱللَّهِ ۚ فَلَا يَأْمَنُ مَكْرَ ٱللَّهِ إِلَّا ٱلْقَوْمُ ٱلْخَـٰسِرُونَ ﴿٩٩﴾

அல்லாஹ் அவர்களுக்கு வழங்கிய அவகாசத்தையும் பலம், தாராளமான வசதிகள் என அருட்கொடைகளை வழங்கி கொஞ்சம் கொஞ்சமாக அவர்களைப் பிடித்ததையும் சிந்தித்துப் பாருங்கள். நிராகரித்த அந்த ஊர்வாசிகள் அல்லாஹ்வின் சூழ்ச்சியை விட்டும் மறைமுகமான திட்டத்தை விட்டும் அச்சமற்றுள்ளனரா என்ன? அழியக்கூடிய மக்கள்தாம் அல்லாஹ்வின் சூழ்ச்சியை விட்டும் அச்சமற்று இருப்பார்கள். நேர்வழிபெற்றவர்களோ அவனுடைய சூழ்ச்சியைக் குறித்து அஞ்சுவார்கள். தங்களுக்குக் கிடைத்த அருட்கொடைகளைக் கொண்டு அவர்கள் ஏமாந்துவிட மாட்டார்கள். தங்கள் மீது அவன் பொழிந்த அருட்கொடைகளுக்காக அவனுக்கு நன்றி செலுத்துவார்கள்.