அல்-முக்தஸர்
قَدِ ٱفْتَرَيْنَا عَلَى ٱللَّهِ كَذِبًا إِنْ عُدْنَا فِى مِلَّتِكُم بَعْدَ إِذْ نَجَّىٰنَا ٱللَّهُ مِنْهَا ۚ وَمَا يَكُونُ لَنَآ أَن نَّعُودَ فِيهَآ إِلَّآ أَن يَشَآءَ ٱللَّهُ رَبُّنَا ۚ وَسِعَ رَبُّنَا كُلَّ شَىْءٍ عِلْمًا ۚ عَلَى ٱللَّهِ تَوَكَّلْنَا ۚ رَبَّنَا ٱفْتَحْ بَيْنَنَا وَبَيْنَ قَوْمِنَا بِٱلْحَقِّ وَأَنتَ خَيْرُ ٱلْفَـٰتِحِينَ ﴿٨٩﴾
நீங்கள் இருக்கும் இணைவைப்பையும் நிராகரிப்பையும் விட்டு அல்லாஹ் தன் அருளால் எங்களைக் காப்பாற்றிய பிறகு நாம் அவற்றை ஏற்றுக் கொண்டால் அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டியவர்களாவோம். எங்கள் இறைவனான அல்லாஹ் நாடினாலே தவிர உங்களுடைய மார்க்கத்தின்பால் திரும்புவது எங்களுக்கு உகந்ததல்ல. அனைத்தும் அவனுடைய நாட்டத்துக்கு உட்பட்டதாகும். எங்கள் இறைவன் தன் அறிவால் அனைத்தையும் சூழ்ந்துள்ளான். அவற்றில் எதுவும் அவனை விட்டு மறையாது. நேரான வழியில் அவன் எங்களை நிலைத்திருக்கச் செய்வதற்காகவும் நரகத்தின் வழிகளை விட்டும் எங்களைப் பாதுகாப்பதற்காகவும் அவனையே நாங்கள் சார்ந்துள்ளோம். எங்கள் இறைவா! எங்களுக்கும் சத்தியத்தை நிராகரித்த எங்கள் சமூகத்திற்குமிடையே தீர்ப்பளிப்பாயாக. அநியாயக்காரர்களுக்கு எதிராக சத்தியத்தைப் பின்பற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி புரிவாயாக. எங்கள் இறைவா! நீயே மிகச் சிறந்த தீர்ப்பு வழங்கக்கூடியவன்.