அல்-முக்தஸர்
وَلَا تَقْعُدُوا۟ بِكُلِّ صِرَٰطٍ تُوعِدُونَ وَتَصُدُّونَ عَن سَبِيلِ ٱللَّهِ مَنْ ءَامَنَ بِهِۦ وَتَبْغُونَهَا عِوَجًا ۚ وَٱذْكُرُوٓا۟ إِذْ كُنتُمْ قَلِيلًا فَكَثَّرَكُمْ ۖ وَٱنظُرُوا۟ كَيْفَ كَانَ عَـٰقِبَةُ ٱلْمُفْسِدِينَ ﴿٨٦﴾
மக்களின் செல்வங்களைக் கொள்ளையடிப்பதற்காகவும் அல்லாஹ்வின் பாதையில் மக்கள் செல்ல முடியாத அளவுக்கு கோணலை ஏற்படுத்த நாடியவர்களாக நேர்வழியை விரும்புபவர்களை மார்க்கத்தை விட்டும் தடுப்பதற்காகவும் அவர்களைப் பயமுறுத்தியவாறு, வழிகளில் அமராதீர்கள். அல்லாஹ்வின் அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்தும் பொருட்டு அவன் உங்கள் மீது பொழிந்த அருட்கொடைகளை நினைவுகூருங்கள். நீங்கள் குறைவான எண்ணிக்கையினராக இருந்தீர்கள். அவனே உங்களை அதிகப்படுத்தினான். உங்களுக்கு முன்னர் பூமியில் குழப்பம் செய்தோரின் கதி என்னவாயிற்று என்பதை சிந்தித்துப் பாருங்கள். அழிவும் நாசமுமே அவர்களுக்கு நேர்ந்த கதியாகும்.