×

الأعراف

வசனம் 81

அல்-முக்தஸர்

إِنَّكُمْ لَتَأْتُونَ ٱلرِّجَالَ شَهْوَةً مِّن دُونِ ٱلنِّسَآءِ ۚ بَلْ أَنتُمْ قَوْمٌ مُّسْرِفُونَ ﴿٨١﴾

உங்களின் இச்சையைத் தணித்துக் கொள்வதற்காக உங்களுக்காக படைக்கப்பட்ட பெண்களை விடுத்து ஆண்களிடம் செல்கிறீர்கள். அறிவுக்கும் இயல்புக்கும் மார்க்கத்திற்கும் மாற்றமான காரியத்தில் ஈடுபடுகிறீர்கள். உங்களது இச்செயலில் பகுத்தறிவு, கேட்டறிவு, மனித இயல்பு ஆகிய எதனையும் பின்பற்றவில்லை. மனித வரம்பை மீறி ஆரோக்கியமான சிந்தனை, நல் இயல்பை விட்டும் நெறிபிறழ்ந்து அல்லாஹ்வின் வரம்புகளை மீறிவிட்டீர்கள்.