×

الأعراف

வசனம் 75

அல்-முக்தஸர்

قَالَ ٱلْمَلَأُ ٱلَّذِينَ ٱسْتَكْبَرُوا۟ مِن قَوْمِهِۦ لِلَّذِينَ ٱسْتُضْعِفُوا۟ لِمَنْ ءَامَنَ مِنْهُمْ أَتَعْلَمُونَ أَنَّ صَـٰلِحًا مُّرْسَلٌ مِّن رَّبِّهِۦ ۚ قَالُوٓا۟ إِنَّا بِمَآ أُرْسِلَ بِهِۦ مُؤْمِنُونَ ﴿٧٥﴾

அவரது சமூகத்தில் கர்வம் கொண்ட தலைவர்களும் பெரியவர்களும் தாங்கள் பலவீனர்களாகக் கருதிய நம்பிக்கையாளர்களிடம் கேட்டார்கள்: “நம்பிக்கையாளர்களே! ஸாலிஹ் அல்லாஹ்வின் புறத்திலிருந்து அனுப்பப்பட்டவர் என்பதை உண்மையாகவே நீங்கள் அறிவீர்களா?” பலவீனமாக கருதப்பட்ட நம்பிக்கையாளர்கள் கூறினார்கள்: “நிச்சயமாக ஸாலிஹ் எதைக் கொண்டு எங்களிடம் அனுப்பப்பட்டாரோ அதை நாங்கள்உண்மைப்படுத்துகிறோம், ஏற்றுக் கொள்கிறோம். அதற்கு நாங்கள் அடிபணிகிறோம். அதன் சட்டங்களின்படி செயல்படுவோம்.”