அல்-முக்தஸர்
وَإِلَىٰ ثَمُودَ أَخَاهُمْ صَـٰلِحًا ۗ قَالَ يَـٰقَوْمِ ٱعْبُدُوا۟ ٱللَّهَ مَا لَكُم مِّنْ إِلَـٰهٍ غَيْرُهُۥ ۖ قَدْ جَآءَتْكُم بَيِّنَةٌ مِّن رَّبِّكُمْ ۖ هَـٰذِهِۦ نَاقَةُ ٱللَّهِ لَكُمْ ءَايَةً ۖ فَذَرُوهَا تَأْكُلْ فِىٓ أَرْضِ ٱللَّهِ ۖ وَلَا تَمَسُّوهَا بِسُوٓءٍ فَيَأْخُذَكُمْ عَذَابٌ أَلِيمٌ ﴿٧٣﴾
நாம் ஸமூத் சமூகத்திற்கு அவர்களது சகோதரர் ஸாலிஹை அனுப்பினோம். அவர் அல்லாஹ் ஒருவனையே வணங்க வேண்டும் என்பதன்பால் அவர்களை அழைத்தார். ஸாலிஹ் அவர்களிடம் கூறினார்: “அல்லாஹ்வை மட்டுமே வணங்குங்கள். உங்களுக்கு வணக்கத்திற்குத் தகுதியான இறைவன் அவனைத் தவிர வேறு யாரும் இல்லை. நான் கொண்டு வந்தது உண்மையே என்பதற்கு அல்லாஹ்வின் புறத்திலிருந்து ஆதாரமும் உங்களிடம் வந்துள்ளது. அது பாறையிலிருந்து வெளியான பெண் ஒட்டகமாகும். அது நீர் அருந்துவதற்கு குறிப்பிட்ட நேரம் இருக்கின்றது. உங்களுக்கும் குடிப்பதற்கு ஒரு குறிப்பிட்ட நாள் உண்டு. அதனை அல்லாஹ்வின் பூமியில் மேய விடுங்கள். அதனைப் பராமரிப்பதில் உங்கள் மீது எந்தப் பொறுப்பும் இல்லை. அதற்குத் தீங்கிழைத்து விடாதீர்கள். தீங்கிழைத்தால் அதன் காரணமாக வேதனை மிக்க தண்டனை உங்களை அடையும்.