அல்-முக்தஸர்
أَوَعَجِبْتُمْ أَن جَآءَكُمْ ذِكْرٌ مِّن رَّبِّكُمْ عَلَىٰ رَجُلٍ مِّنكُمْ لِيُنذِرَكُمْ ۚ وَٱذْكُرُوٓا۟ إِذْ جَعَلَكُمْ خُلَفَآءَ مِنۢ بَعْدِ قَوْمِ نُوحٍ وَزَادَكُمْ فِى ٱلْخَلْقِ بَصْۜطَةً ۖ فَٱذْكُرُوٓا۟ ءَالَآءَ ٱللَّهِ لَعَلَّكُمْ تُفْلِحُونَ ﴿٦٩﴾
வானவர் இனத்தையோ ஜின் இனத்தையோ சாராத உங்கள் இனத்தைச் சார்ந்த ஒரு மனிதர் வாயிலாக உங்களை எச்சரிப்பதற்கு உங்கள் இறைவனிடமிருந்து அறிவுரை வந்துள்ளது உங்களை ஆச்சரியமூட்டுகிறதா? பூமியில் வாழ்க்கை வசதிகளை ஏற்படுத்தியதற்கும், தமது நிராகரிப்பினால் அழிந்துபோன நூஹ் நபியின் சமூகத்திற்குப் பிறகு உங்களை வழித்தோன்றல்களாக ஆக்கியதற்கும் உங்கள் இறைவனைப் புகழ்ந்து, அவனுக்கு நன்றி செலுத்துங்கள். உங்களுக்கு உடல் பலத்தையும் வலிமையையும் வழங்கியதற்காக அல்லாஹ்வுக்கு நன்றிசெலுத்துங்கள். நீங்கள் வெறுக்கும் விஷயத்திலிருந்து தப்பித்து விரும்பியதைப் பெற்று வெற்றி பெறும்பொருட்டு அல்லாஹ் உங்கள் மீது பொழிந்த விசாலமான அருட்கொடைகளை நினைவுகூருங்கள்.