அல்-முக்தஸர்
هَلْ يَنظُرُونَ إِلَّا تَأْوِيلَهُۥ ۚ يَوْمَ يَأْتِى تَأْوِيلُهُۥ يَقُولُ ٱلَّذِينَ نَسُوهُ مِن قَبْلُ قَدْ جَآءَتْ رُسُلُ رَبِّنَا بِٱلْحَقِّ فَهَل لَّنَا مِن شُفَعَآءَ فَيَشْفَعُوا۟ لَنَآ أَوْ نُرَدُّ فَنَعْمَلَ غَيْرَ ٱلَّذِى كُنَّا نَعْمَلُ ۚ قَدْ خَسِرُوٓا۟ أَنفُسَهُمْ وَضَلَّ عَنْهُم مَّا كَانُوا۟ يَفْتَرُونَ ﴿٥٣﴾
இந்த நிராகரிப்பாளர்கள் அவர்களுக்கு மறுமையில் கிடைக்கும் என அறிவிக்கப்பட்ட வேதனை மிக்க தண்டனை கிடைப்பதையே எதிர்பார்க்கிறார்கள். அவர்களுக்கு அறிவிக்கப்பட்ட வேதனையும் நம்பிக்கையாளர்களுக்குக் கூறப்பட்டிருந்த நற்கூலியும் வரும் நாளில் இவ்வுலகில் குர்ஆனை மறந்து அதன்படி செயல்படாதவர்கள் கூறுவார்கள்: “எங்களின் தூதர்கள் சந்தேகமற்ற சத்தியத்தைக் கொண்டு எங்களிடம் வந்தார்கள். அது அல்லாஹ்விடமிருந்து வந்தது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அந்தோ! வேதனையிலிருந்து எங்களைக் காப்பாற்றி அல்லாஹ்விடம் எங்களுக்காக பரிந்துரை செய்பவர்கள் இருக்க வேண்டுமே! அந்தோ! நாம் மீண்டும் உலகத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டு நாம் செய்த தீய செயல்களுக்குப் பகரமாக தப்பிக்கொள்வதற்கான நற்செயல்களில் ஈடுபட வேண்டுமே!.” இந்த நிராகரிப்பாளர்கள் தங்களின் நிராகரிப்பினால் தங்களைத் தாங்களே அழிவில் ஆழ்த்திக் கொண்டார்கள். அல்லாஹ்வைத் தவிர அவர்கள் வணங்கிக் கொண்டிருந்த அனைத்தும் அவர்களை விட்டு மறைந்து விடும். அவை அவர்களுக்கு எந்தப் பயனையும் அளிக்காது.