×

الأعراف

வசனம் 51

அல்-முக்தஸர்

ٱلَّذِينَ ٱتَّخَذُوا۟ دِينَهُمْ لَهْوًا وَلَعِبًا وَغَرَّتْهُمُ ٱلْحَيَوٰةُ ٱلدُّنْيَا ۚ فَٱلْيَوْمَ نَنسَىٰهُمْ كَمَا نَسُوا۟ لِقَآءَ يَوْمِهِمْ هَـٰذَا وَمَا كَانُوا۟ بِـَٔايَـٰتِنَا يَجْحَدُونَ ﴿٥١﴾

இந்த நிராகரிப்பாளர்கள்தாம் தங்களின் மார்க்கத்தை பரிகாசமாகவும் விளையாட்டாகவும் ஆக்கினார்கள். உலக வாழ்வின் அலங்காரங்கள் அவர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்திவிட்டது. அவர்கள் மறுமை நாளின் சந்திப்பை மறந்து அதற்காக செயல்படாமலும் தயாராகாமலும் இருந்ததைப் போலவும், அல்லாஹ்வின் சான்றுகளையும் ஆதாரங்களையும் உண்மையென அறிந்துகொண்டே அவற்றை நிராகரித்ததைப் போலவும் அல்லாஹ்வும் மறுமை நாளில் அவர்களை மறந்து, வேதனையில் சூழலுமாறு அவர்களை விட்டுவிடுவான்.