×

الأعراف

வசனம் 40

அல்-முக்தஸர்

إِنَّ ٱلَّذِينَ كَذَّبُوا۟ بِـَٔايَـٰتِنَا وَٱسْتَكْبَرُوا۟ عَنْهَا لَا تُفَتَّحُ لَهُمْ أَبْوَٰبُ ٱلسَّمَآءِ وَلَا يَدْخُلُونَ ٱلْجَنَّةَ حَتَّىٰ يَلِجَ ٱلْجَمَلُ فِى سَمِّ ٱلْخِيَاطِ ۚ وَكَذَٰلِكَ نَجْزِى ٱلْمُجْرِمِينَ ﴿٤٠﴾

நம்முடைய தெளிவான வசனங்களைப் பொய்யெனக் கூறி அவற்றுக்கு அடிபணியாமல் கர்வம் கொண்டவர்கள் எல்லா நன்மைகளை விட்டும் நம்பிக்கை இழந்துவிட்டார்கள். அவர்கள் இறந்த பிறகு அவர்களின் நிராகரிப்பினால், அவர்களது செயல்களுக்கும் ஆன்மாக்களுக்கும் வானத்தின் கதவுகள் திறக்கப்படாது. பெரும் மிருகங்களில் ஒன்றாகிய ஒட்டகம் மிகவும் சிறிய பொருட்களில் ஒன்றாகிய ஊசியின் துவாரத்தின் வழியே நுழையும் வரை அவர்கள் சுவனத்தில் நுழைய மாட்டார்கள். இது எவ்வாறு சாத்தியமற்றதோ அது போல் அவர்கள் சுவனம் நுழைவதும் சாத்தியமற்றதே. இவ்வாறே பெரும் பாவிகளுக்கு அல்லாஹ் கூலி வழங்குகின்றான்.