×

الأعراف

வசனம் 38

அல்-முக்தஸர்

قَالَ ٱدْخُلُوا۟ فِىٓ أُمَمٍ قَدْ خَلَتْ مِن قَبْلِكُم مِّنَ ٱلْجِنِّ وَٱلْإِنسِ فِى ٱلنَّارِ ۖ كُلَّمَا دَخَلَتْ أُمَّةٌ لَّعَنَتْ أُخْتَهَا ۖ حَتَّىٰٓ إِذَا ٱدَّارَكُوا۟ فِيهَا جَمِيعًا قَالَتْ أُخْرَىٰهُمْ لِأُولَىٰهُمْ رَبَّنَا هَـٰٓؤُلَآءِ أَضَلُّونَا فَـَٔاتِهِمْ عَذَابًا ضِعْفًا مِّنَ ٱلنَّارِ ۖ قَالَ لِكُلٍّ ضِعْفٌ وَلَـٰكِن لَّا تَعْلَمُونَ ﴿٣٨﴾

வானவர்கள் அவர்களிடம் கூறுவார்கள்: “இணைவைப்பாளர்களே! உங்களுக்கு முன் வழிகெட்ட, நிராகரித்த மனித, ஜின் இனத்தாருடன் சேர்ந்து நரகத்தில் நுழைந்துவிடுங்கள்.” அந்த சமூகங்களில் ஏதேனும் ஒரு சமூகம் நுழையும் போதெல்லாம் தமக்கு முன் நரகத்தில் இருக்கும் தம் சகோதர சமூகத்தை சபிக்கும். அவையனைத்தும் ஒன்று சேர்ந்தவுடன் இறுதியாக நுழைந்த சமூகமான கீழ்மட்டத்தினர்களும் பின்பற்றியோரும், முதலாவதாக நுழைந்த சமூகமான பெரியவர்களையும் தலைவர்களையும் பார்த்துக் கூறும்: “எங்கள் இறைவா! இந்த தலைவர்கள் தாம் எங்களை நேர்வழியை விட்டும் வழிகெடுத்துவிட்டார்கள். அவர்கள் எங்களுக்கு வழிகேட்டை அலங்கரித்துக் காட்டியதற்காக அவர்களுக்கு இருமடங்கு வேதனையை அளிப்பாயாக.” அதற்கு அல்லாஹ் மறுத்து கூறுவான்: “உங்களில் ஒவ்வொரு கூட்டத்தினருக்கும் வேதனையில் இரு மடங்கு பங்கு உண்டு. ஆயினும் நீங்கள் அவற்றை அறிந்து கொள்ளாமலும் புரியாமலும் உள்ளீர்கள்.”