அல்-முக்தஸர்
وَإِذَا لَمْ تَأْتِهِم بِـَٔايَةٍ قَالُوا۟ لَوْلَا ٱجْتَبَيْتَهَا ۚ قُلْ إِنَّمَآ أَتَّبِعُ مَا يُوحَىٰٓ إِلَىَّ مِن رَّبِّى ۚ هَـٰذَا بَصَآئِرُ مِن رَّبِّكُمْ وَهُدًى وَرَحْمَةٌ لِّقَوْمٍ يُؤْمِنُونَ ﴿٢٠٣﴾
தூதரே!- நீர் ஏதேனும் சான்றினைக் கொண்டு வந்தால் உம்மை பொய்யர் என்று கூறி அதனைப் புறக்கணித்து விடுகிறார்கள். நீர் சான்றினைக் கொண்டு வரவில்லையெனில், “உம் புறத்திலிருந்து ஏதேனும் ஒரு சான்றினை புனைந்து கொண்டுவர வேண்டாமா” என்று கேட்கிறார்கள். -தூதரே!- நீர் அவர்களிடம் கூறுவீராக: “என் புறத்திலிருந்து சுயமாக என்னால் சான்றினைக் கொண்டுவர முடியாது. அல்லாஹ் எனக்கு வஹியாக அறிவிப்பதையே நான் பின்பற்றுகிறேன். நான் உங்களுக்குப் படித்துக் காட்டும் இந்தக் குர்ஆன் உங்களைப் படைத்து உங்களின் விவகாரங்களை நிர்வகிக்கும் அல்லாஹ்விடமிருந்து சான்றுகளையும் ஆதாரங்களையும் உள்ளடக்கியுள்ளது. அது நம்பிக்கை கொண்ட அடியார்களுக்கு வழிகாட்டியாகவும் கருணையாகவும் இருக்கின்றது. நம்பிக்கை கொள்ளாதவர்களோ வழிகேடர்களாகவும் துர்பாக்கியசாலிகளாகவும் இருக்கின்றார்கள்.