×

الأعراف

வசனம் 171

அல்-முக்தஸர்

وَإِذْ نَتَقْنَا ٱلْجَبَلَ فَوْقَهُمْ كَأَنَّهُۥ ظُلَّةٌ وَظَنُّوٓا۟ أَنَّهُۥ وَاقِعٌۢ بِهِمْ خُذُوا۟ مَآ ءَاتَيْنَـٰكُم بِقُوَّةٍ وَٱذْكُرُوا۟ مَا فِيهِ لَعَلَّكُمْ تَتَّقُونَ ﴿١٧١﴾

தூதரே! இஸ்ராயீலின் மக்கள் தவ்ராத்தில் உள்ளவற்றை ஏற்றுக்கொள்ள மறுத்த போது நாம் அவர்கள் மீது மலையை உயர்த்தியதை நினைவுகூர்வீராக. அது அவர்களின் தலைக்கு மேலிருக்கும் மேகம் போல ஆகிவிட்டது. அது தங்களின் மீது விழுந்து விடும் என்று அவர்கள் உறுதியாக நம்பினார்கள். அப்போது அவர்களிடம் கூறப்பட்டது: “நாம் உங்களுக்கு வழங்கியதை உறுதியாகப் பற்றிக் கொள்ளுங்கள். நீங்கள் அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளும் பொருட்டு அதில் அவன் கூறிய சட்டங்களை நினைவுகூர்ந்து செயல்படுத்துங்கள். அவனை மறந்து விடாதீர்கள்.”