அல்-முக்தஸர்
وَإِذْ تَأَذَّنَ رَبُّكَ لَيَبْعَثَنَّ عَلَيْهِمْ إِلَىٰ يَوْمِ ٱلْقِيَـٰمَةِ مَن يَسُومُهُمْ سُوٓءَ ٱلْعَذَابِ ۗ إِنَّ رَبَّكَ لَسَرِيعُ ٱلْعِقَابِ ۖ وَإِنَّهُۥ لَغَفُورٌ رَّحِيمٌ ﴿١٦٧﴾
தூதரே! மறுமை நாள் வரை இந்த உலக வாழ்வில் யூதர்களை இழிவுபடுத்துவோரை அவர்கள் மீது சாட்டிக்கொண்டே இருப்போம் என்ற சந்தேகமற்ற தெளிவான அல்லாஹ்வின் பிரகடனத்தை நினைவுகூர்வீராக. தூதரே! உம் இறைவன் தன் கட்டளைக்கு மாறாகச் செயல்படக்கூடியவர்களை கடுமையாக தண்டிக்கக்கூடியவன். சில வேளை இவ்வுலகிலேயே அவர்களுக்குத் தண்டனை அளித்துவிடுகிறான். ஆயினும் அவன் தன்னிடம் பாவமன்னிப்புக் கோரும் அடியார்களை மன்னிக்கக்கூடியவனாகவும் அவர்களின் விஷயத்தில் மிகுந்த கருணையாளனாகவும் இருக்கின்றான்.