அல்-முக்தஸர்
وَإِذْ قَالَتْ أُمَّةٌ مِّنْهُمْ لِمَ تَعِظُونَ قَوْمًا ۙ ٱللَّهُ مُهْلِكُهُمْ أَوْ مُعَذِّبُهُمْ عَذَابًا شَدِيدًا ۖ قَالُوا۟ مَعْذِرَةً إِلَىٰ رَبِّكُمْ وَلَعَلَّهُمْ يَتَّقُونَ ﴿١٦٤﴾
தூதரே! அவர்களில் ஒரு கூட்டம் இத்தீமையை விட்டும் அவர்களைத் தடுத்து அவர்களை எச்சரித்த சந்தர்ப்பத்தை நினைவு கூறுவீராக! அப்போது அவர்களைப் பார்த்து வேறோரு குழுவினர் கூறினார்கள்: “இவர்களுக்கு ஏன் அறிவுரை வழங்குகிறீர்கள்? இவர்களுடைய பாவங்களின் காரணமாக அல்லாஹ் இவர்களை அழித்துவிடுவான் அல்லது மறுமை நாளில் இவர்களுக்கு கடுமையான தண்டனை அளிப்பான்.” அறிவுரை கூறுபவர்கள் கூறினார்கள்: “எங்களின் இந்த அறிவுரையின் நோக்கம், எமக்கு ஏவப்பட்ட நன்மையை ஏவி தீமையைத் தடுக்கும் காரியத்தை விட்டதற்காக அல்லாஹ் தண்டித்துவிடாமல் இருக்க, அதனைச் செய்து அல்லாஹ்விடம் காரணம் கூற வேண்டும் என்பதற்காகவும் அறிவுரையினால் அவர்கள் பயனடைந்து பாவங்களை விட்டொழிப்பதற்காகவும்தான்.”