அல்-முக்தஸர்
وَأَوْرَثْنَا ٱلْقَوْمَ ٱلَّذِينَ كَانُوا۟ يُسْتَضْعَفُونَ مَشَـٰرِقَ ٱلْأَرْضِ وَمَغَـٰرِبَهَا ٱلَّتِى بَـٰرَكْنَا فِيهَا ۖ وَتَمَّتْ كَلِمَتُ رَبِّكَ ٱلْحُسْنَىٰ عَلَىٰ بَنِىٓ إِسْرَٰٓءِيلَ بِمَا صَبَرُوا۟ ۖ وَدَمَّرْنَا مَا كَانَ يَصْنَعُ فِرْعَوْنُ وَقَوْمُهُۥ وَمَا كَانُوا۟ يَعْرِشُونَ ﴿١٣٧﴾
பிர்அவ்னும் அவனுடைய சமூகமும் அடிமைப்படுத்தி வைத்திருந்த இஸ்ராயீலின் மக்களை பூமியின் கிழக்கிற்கும் மேற்கிற்கும் உரிமையாளர்களாக்கினோம். இங்கு பூமி என்பது ஷாம் தேசத்தைக் குறிக்கும். அங்கு பயிர்களையும் பழங்களையும் முழுமையாக விளையச் செய்து அல்லாஹ் அருள் செய்திருந்தான். தூதரே! (“பூமியில் ஒடுக்கப்பட்ட மக்கள் மீது நாம் கிருபை செய்து அவர்களை வழிகாட்டிகளாக்கவும், வாரிசுகளாக்கவும் நாடுகிறோம்”) (28:5) என்ற உம் இறைவனின் அழகிய வார்த்தை நிறைவேறிவிட்டது. பிர்அவ்ன் மற்றும் அவனுடைய சமூகத்தால் ஏற்பட்ட துன்பங்களை அவர்கள் பொறுமையாக எதிர்கொண்டதனால் அவர்களுக்கு அல்லாஹ் பூமியில் ஆட்சியதிகாரத்தை வழங்கினான். பிர்அவ்ன் ஏற்படுத்திக்கொண்டிருந்த பயிர் நிலங்களையும் வசிப்பிடங்களையும் அவர்கள் கட்டிக் கொண்டிந்த மாளிகைகளையும் நாம் அழித்துவிட்டோம்.