அல்-முக்தஸர்
قَالَ مُوسَىٰ لِقَوْمِهِ ٱسْتَعِينُوا۟ بِٱللَّهِ وَٱصْبِرُوٓا۟ ۖ إِنَّ ٱلْأَرْضَ لِلَّهِ يُورِثُهَا مَن يَشَآءُ مِنْ عِبَادِهِۦ ۖ وَٱلْعَـٰقِبَةُ لِلْمُتَّقِينَ ﴿١٢٨﴾
மூஸா தம் சமூகத்தாருக்கு அறிவுரை வழங்கியவராகக் கூறினார்: “என் சமூகமே! உங்களை விட்டு தீங்கை அகற்றி நன்மையைக் கொண்டுவர அல்லாஹ்விடமே உதவிதேடுங்கள். உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் சோதனையில் பொறுமையாக இருங்கள். பூமி அல்லாஹ்வுக்கே சொந்தமானது. பிர்அவ்ன் தான் நினைத்தவாறு அதில் இயங்க அதுவொன்றும் அனுக்கோ ஏனையோருக்கோ சொந்தமானதல்ல. அல்லாஹ் மக்களிடையே தன் நாட்டப்படி மாறிமாறி வழங்குகிறான். ஆனால் தங்கள் இறைவனின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகியிருக்கும் நம்பிக்கையாளர்களுக்கு பூமியில் நல்ல முடிவு காத்திருக்கின்றது. அவர்கள் சோதனைகளாலும் கஷ்டங்களாலும் பாதிக்கப்பட்டாலும் பூமி அவர்களுக்குச் சொந்தமானதே.”