அல்-முக்தஸர்
ثُمَّ بَعَثْنَا مِنۢ بَعْدِهِم مُّوسَىٰ بِـَٔايَـٰتِنَآ إِلَىٰ فِرْعَوْنَ وَمَلَإِي۟هِۦ فَظَلَمُوا۟ بِهَا ۖ فَٱنظُرْ كَيْفَ كَانَ عَـٰقِبَةُ ٱلْمُفْسِدِينَ ﴿١٠٣﴾
அந்த தூதர்களுக்குப் பிறகு நாம் மூஸாவை அவரை உண்மைப்படுத்தக்கூடிய தெளிவான சான்றுகளுடன் பிர்அவ்னிடமும் அவனுடைய சமூகத்திடமும் அனுப்பினோம். ஆனால் அவர்கள் சான்றுகளை மறுத்து நிராகரித்தார்கள். -தூதரே-! பிர்அவ்ன் மற்றும் அவனுடைய சமூகத்தின் கதி என்னவாயிற்று என்பதை சிந்தித்துப் பார்ப்பீராக. அல்லாஹ் அவர்களை மூழ்கடித்து அழித்து விட்டான். இவ்வுலகிலும் மறுவுலகிலும் சாபம் அவர்களைப் பின்தொடருமாறு செய்தான்.