அல்-முக்தஸர்
ءَأَمِنتُم مَّن فِى ٱلسَّمَآءِ أَن يَخْسِفَ بِكُمُ ٱلْأَرْضَ فَإِذَا هِىَ تَمُورُ ﴿١٦﴾
மேலே இருக்கும் அல்லாஹ் வாழ்வதற்கு ஏற்றதாக இருந்த பூமியை காரூனுக்குக் கீழ் பிளந்தது போன்று உங்களுக்குக் கீழும் பூமியைப் பிளந்துவிடுவான் என்பதைக் குறித்து நீங்கள் அச்சமற்று இருக்கின்றீர்களா? அப்போது உறுதியாக இருந்த பூமி ஆட்டம் கண்டுவிடும்.