அல்-முக்தஸர்
وَهَـٰذَا كِتَـٰبٌ أَنزَلْنَـٰهُ مُبَارَكٌ مُّصَدِّقُ ٱلَّذِى بَيْنَ يَدَيْهِ وَلِتُنذِرَ أُمَّ ٱلْقُرَىٰ وَمَنْ حَوْلَهَا ۚ وَٱلَّذِينَ يُؤْمِنُونَ بِٱلْـَٔاخِرَةِ يُؤْمِنُونَ بِهِۦ ۖ وَهُمْ عَلَىٰ صَلَاتِهِمْ يُحَافِظُونَ ﴿٩٢﴾
தூதரே! மக்காவாசிகளையும் உலகின் கிழக்கு, மேற்கில் உள்ள அனைவரையும் - அவர்கள் நேர்வழி அடையும் பொருட்டு - நீர் எச்சரிக்கை செய்ய வேண்டும் என்பதற்காக நாமே இந்தக் குர்ஆனை உம்மீது இறக்கினோம். இது பாக்கியம் நிறைந்த, தனக்கு முன்னுள்ள வேதங்களை உண்மைப்படுத்தும் வேதமாகும். மறுமை நாளை உண்மைப்படுத்துபவர்கள் இந்தக் குர்ஆனை உண்மைப்படுத்துகிறார்கள்; அதன்படி செயல்படுகிறார்கள்; தொழுகையை அதற்குரிய நிபந்தனைகள், கடமைகள் மற்றும் சுன்னத்துகளுடன் மார்க்கம் குறிப்பிட்ட நேரத்தில் நிறைவேற்றுகிறார்கள்.