அல்-முக்தஸர்
وَتِلْكَ حُجَّتُنَآ ءَاتَيْنَـٰهَآ إِبْرَٰهِيمَ عَلَىٰ قَوْمِهِۦ ۚ نَرْفَعُ دَرَجَـٰتٍ مَّن نَّشَآءُ ۗ إِنَّ رَبَّكَ حَكِيمٌ عَلِيمٌ ﴿٨٣﴾
”இரு அணிகளில் எது அச்சமற்றிருப்பதற்குத் தகுதியானது” என்ற வாதத்தின் மூலம் இப்ராஹீம் தனது சமூகத்தை மிகைத்தது மட்டுமின்றி அவர்களது வாதம் தோற்றும்விட்டது. அவரது சமூகத்துடன் விவாதிப்பதற்காக நாமே இவ்வாதத்தை அவருக்குக் கற்றுக் கொடுத்தோம். நம் அடியார்களில் நாம் நாடியவர்களுக்கு இவ்வுலகிலும் மறுவுலகிலும் உயர்ந்த அந்தஸ்தை வழங்குகிறோம். தூதரே! உம் இறைவன் தன் படைப்பிலும் நிர்வகிப்பதிலும் ஞானம்மிக்கவன். அவன் தன் அடியார்களைக் குறித்து நன்கறிந்தவன்.