அல்-முக்தஸர்
وَقَالُوا۟ لَوْلَآ أُنزِلَ عَلَيْهِ مَلَكٌ ۖ وَلَوْ أَنزَلْنَا مَلَكًا لَّقُضِىَ ٱلْأَمْرُ ثُمَّ لَا يُنظَرُونَ ﴿٨﴾
இந்த நிராகரிப்பாளர்கள் கூறுகிறார்கள்: “அல்லாஹ் முஹம்மதுடன் ஒரு வானவரை அனுப்பி அவர், இவர் தூதர்தான் என்று எங்களிடம் கூறினால் நாங்கள் நம்பிக்கைகொள்வோம்”. அவர்கள் கூறியவாறு நாம் ஒரு வானவரை அனுப்பி, அவர்கள் நம்பிக்கைகொள்ளவில்லையெனில் அவர்களை அழித்துவிடுவோம். வானவர் வந்துவிட்டால் பாவமன்னிப்புக்கான அவகாசம் தரப்படாது.