அல்-முக்தஸர்
فَلَمَّا رَءَا ٱلشَّمْسَ بَازِغَةً قَالَ هَـٰذَا رَبِّى هَـٰذَآ أَكْبَرُ ۖ فَلَمَّآ أَفَلَتْ قَالَ يَـٰقَوْمِ إِنِّى بَرِىٓءٌ مِّمَّا تُشْرِكُونَ ﴿٧٨﴾
அவர் சூரியன் உதிப்பதைக் கண்ட போது, ‘இதுதான் என் இறைவன், இது நட்சத்திரத்தையும் சந்திரனையும் விட பெரியது’ என்றார். அதுவும் மறைந்த போது, “என் சமூகமே, நீங்கள் அல்லாஹ்வுக்கு இணையாக்கியவைகளை விட்டும் நான் நீங்கியவனாவேன்” என்றார்.