அல்-முக்தஸர்
وَإِذْ قَالَ إِبْرَٰهِيمُ لِأَبِيهِ ءَازَرَ أَتَتَّخِذُ أَصْنَامًا ءَالِهَةً ۖ إِنِّىٓ أَرَىٰكَ وَقَوْمَكَ فِى ضَلَـٰلٍ مُّبِينٍ ﴿٧٤﴾
தூதரே! இப்ராஹீம் இணைவபை்பாளரான தம் தந்தை ஆஸரிடம் கூறியதை நினைவுகூர்வீராக: “என் அன்புத் தந்தையே! நீங்கள் அல்லாஹ்வை விடுத்து சிலைகளையா கடவுள்களாக ஆக்கிக் கொண்டீர்கள்? அல்லாஹ் அல்லாதவற்றை வணங்குவதனால், உங்களையும், சிலைகளை வணங்கும் உங்கள் சமூகத்தையும் தெளிவான வழிகேட்டிலும், சத்தியப் பாதையை விட்டும் தடுமாற்றத்திலும் நான் காண்கிறேன். அல்லாஹ்தான் வணக்கத்திற்குத் தகுதியான உண்மையான இறைவன். அவனைத் தவிர அனைத்தும் பொய்யாக வணங்கப்படுபவையே.