×

الأنعام

வசனம் 71

அல்-முக்தஸர்

قُلْ أَنَدْعُوا۟ مِن دُونِ ٱللَّهِ مَا لَا يَنفَعُنَا وَلَا يَضُرُّنَا وَنُرَدُّ عَلَىٰٓ أَعْقَابِنَا بَعْدَ إِذْ هَدَىٰنَا ٱللَّهُ كَٱلَّذِى ٱسْتَهْوَتْهُ ٱلشَّيَـٰطِينُ فِى ٱلْأَرْضِ حَيْرَانَ لَهُۥٓ أَصْحَـٰبٌ يَدْعُونَهُۥٓ إِلَى ٱلْهُدَى ٱئْتِنَا ۗ قُلْ إِنَّ هُدَى ٱللَّهِ هُوَ ٱلْهُدَىٰ ۖ وَأُمِرْنَا لِنُسْلِمَ لِرَبِّ ٱلْعَـٰلَمِينَ ﴿٧١﴾

தூதரே! இந்த இணைவைப்பாளர்களிடம் கேட்பீராக: “எங்களுக்கு நன்மையோ தீமையோ அளிக்க இயலாத இந்த சிலைகளையா நாங்கள் வணங்க வேண்டும்? அல்லாஹ் எங்களுக்கு நேர்வழிகாட்டிய பிறகு ஈமானை நாங்கள் இழந்து, ஷைத்தான்களால் வழிகெடுக்கப்பட்டவன் போல் ஆகலாமா? ஷைத்தான் அவனை செய்வதறியாது தடுமாறித் திரியுமாறு விட்டுவிட்டான். அதே நேரத்தில் அவனை நேரான வழியின் பக்கம் அழைக்கக்கூடிய தோழர்கள் இருந்தும் அவன் அந்த தோழர்களின் அழைப்பை ஏற்றுக் கொள்ளவில்லை. தூதரே! நீர் அவர்களிடம் கூறுவீராக: “அல்லாஹ் காட்டிய வழியே நேரான வழியாகும். நாங்கள் அல்லாஹ்வை மட்டுமே வணங்கி அவனுக்கே அடிபணியுமாறு அல்லாஹ் எமக்கு ஏவியுள்ளான். அவன்தான் படைப்புகள் அனைத்தையும் படைத்துப் பராமரிக்கும் இறைவன்.”