×

الأنعام

வசனம் 63

அல்-முக்தஸர்

قُلْ مَن يُنَجِّيكُم مِّن ظُلُمَـٰتِ ٱلْبَرِّ وَٱلْبَحْرِ تَدْعُونَهُۥ تَضَرُّعًا وَخُفْيَةً لَّئِنْ أَنجَىٰنَا مِنْ هَـٰذِهِۦ لَنَكُونَنَّ مِنَ ٱلشَّـٰكِرِينَ ﴿٦٣﴾

தூதரே! இந்த இணைவைப்பாளர்களிடம் கேட்பீராக: “நீரிலும் நிலத்திலுமுள்ள இருள்களில் உங்களுக்கு நேரும் அழிவுகளிலிருந்து உங்களைக் காப்பவன் யார்? அப்போது, “எங்கள் இறைவா! இந்த அழிவிலிருந்து எங்களை நீ காப்பாற்றிவிட்டால் உன்னைத் தவிர யாரையும் வணங்காமல் நீ எங்கள் மீது பொழிந்த அருட்கொடைகளுக்கு நன்றிசெலுத்தும் அடியார்களாகி விடுவோம்” என வெளிப்படையாகவும் இரகசியமாகவும் பணிவுடன் அவனையே நீங்கள் அழைக்கின்றீர்கள்.