×

الأنعام

வசனம் 57

அல்-முக்தஸர்

قُلْ إِنِّى عَلَىٰ بَيِّنَةٍ مِّن رَّبِّى وَكَذَّبْتُم بِهِۦ ۚ مَا عِندِى مَا تَسْتَعْجِلُونَ بِهِۦٓ ۚ إِنِ ٱلْحُكْمُ إِلَّا لِلَّهِ ۖ يَقُصُّ ٱلْحَقَّ ۖ وَهُوَ خَيْرُ ٱلْفَـٰصِلِينَ ﴿٥٧﴾

தூதரே! இந்த இணைவைப்பாளர்களிடம் நீர் கூறுவீராக: “நான் என் இறைவனிடமிருந்துள்ள தெளிவான ஆதாரத்தின் மீது இருக்கின்றேன். வெறும் மனஇச்சையின் மீதல்ல. நீங்கள் இந்த ஆதாரத்தை நிராகரித்துவிட்டீர்கள். நீங்கள் அவசரப்படுத்தும் வேதனையயோ, நீங்கள் கேட்கும் அற்புத சான்றுகளோ என் கைவசம் இல்லை. அவைகள் அல்லாஹ்விடமே உள்ளன. அனைத்து தீர்ப்பும்- நீங்கள் கேட்பது உட்பட- அல்லாஹ்விடமே உள்ளது. அவன் உண்மையைக் கூறுகிறான். அதைக் கொண்டு தீர்ப்பளிக்கிறான். அவனே தெளிவுபடுத்துவதிலும் அசத்தியத்திலிருந்து சத்தியத்தை வேறுபடுத்துவதிலும் மிகச்சிறந்தவன்.