×

الأنعام

வசனம் 54

அல்-முக்தஸர்

وَإِذَا جَآءَكَ ٱلَّذِينَ يُؤْمِنُونَ بِـَٔايَـٰتِنَا فَقُلْ سَلَـٰمٌ عَلَيْكُمْ ۖ كَتَبَ رَبُّكُمْ عَلَىٰ نَفْسِهِ ٱلرَّحْمَةَ ۖ أَنَّهُۥ مَنْ عَمِلَ مِنكُمْ سُوٓءًۢا بِجَهَـٰلَةٍ ثُمَّ تَابَ مِنۢ بَعْدِهِۦ وَأَصْلَحَ فَأَنَّهُۥ غَفُورٌ رَّحِيمٌ ﴿٥٤﴾

தூதரே! நீர் கொண்டுவந்ததன் நம்பகத் தன்மையை அறிவிக்கக்கூடிய நம் சான்றுகளை உண்மைப்படுத்தக்கூடியவர்கள் உம்மிடம் வந்தால் அவர்களைக் கண்ணியப்படுத்தும் பொருட்டு சலாம் என்னும் முகமன் கூறுவீராக. அல்லாஹ்வின் விசாலமான கருணையைக் கொண்டு அவர்களுக்கு நற்செய்தி கூறுவீராக. கருணை புரிவதை அல்லாஹ் தன்மீது உபரியாகக் கடமையாக்கிக் கொண்டான். யாரேனும் அறியாமல் பாவம் செய்து பின்னர் பாவமன்னிப்புக் கோரி தம் செயலைச் சீர்படுத்திக் கொண்டால் நிச்சயமாக அல்லாஹ் அவர்களை மன்னிக்கக்கூடியவன். தன்னிடம் பாவமன்னிப்புக் கோரும் அடியார்களை அவன் மன்னிக்கக்கூடியவன். அவர்களின் விஷயத்தில் அவன் மிகுந்த கருணையாளனாக இருக்கின்றான்.