×

الأنعام

வசனம் 51

அல்-முக்தஸர்

وَأَنذِرْ بِهِ ٱلَّذِينَ يَخَافُونَ أَن يُحْشَرُوٓا۟ إِلَىٰ رَبِّهِمْ ۙ لَيْسَ لَهُم مِّن دُونِهِۦ وَلِىٌّ وَلَا شَفِيعٌ لَّعَلَّهُمْ يَتَّقُونَ ﴿٥١﴾

தூதரே! மறுமை நாளில் ஒன்று திரட்டப்படுவதை நினைத்து அஞ்சுபவர்களுக்கு இந்த குர்ஆனைக் கொண்டு அச்சமூட்டுவீராக. அந்நாளில் அல்லாஹ்வைத் தவிர நன்மையளிக்கும் எந்த நண்பனோ தீமையைத் தடுக்கும் எந்த சிபாரிசு செய்பவரோ இருக்கமாட்டார். இதனால் அவர்கள் அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி அவனை அஞ்சலாம். இவர்கள்தாம் குர்ஆனைக் கொண்டு பயனடையக்கூடியவர்கள்.