×

الأنعام

வசனம் 48

அல்-முக்தஸர்

وَمَا نُرْسِلُ ٱلْمُرْسَلِينَ إِلَّا مُبَشِّرِينَ وَمُنذِرِينَ ۖ فَمَنْ ءَامَنَ وَأَصْلَحَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ ﴿٤٨﴾

நாம் தூதர்களை அனுப்பவதெல்லாம் நம்பிக்கைகொண்டு கீழ்ப்படிந்தவர்களுக்கு என்றும் முடிவுறாத நிலையான அருட்கொடைகள் உண்டு என்று நற்செய்தி கூறுவதற்காகவும் நிராகரிப்பாளர்களுக்கும் பாவிகளுக்கும் நம்முடைய கடுமையான வேதனையைக் கொண்டு எச்சரிக்கை செய்வதற்காகவும்தான். தூதர்கள் மீது நம்பிக்கைகொண்டு தம் செயலைச் சீர்படுத்திக் கொண்டவர்கள் மறுமைநாளில் நிகழக்கூடியதை எண்ணி அச்சம் கொள்ள மாட்டார்கள். அவர்கள் இழந்த உலக பாக்கியங்களை எண்ணி கவலைகொள்ளவோ கைசேப்படவோ மாட்டார்கள்.