×

الأنعام

வசனம் 46

அல்-முக்தஸர்

قُلْ أَرَءَيْتُمْ إِنْ أَخَذَ ٱللَّهُ سَمْعَكُمْ وَأَبْصَـٰرَكُمْ وَخَتَمَ عَلَىٰ قُلُوبِكُم مَّنْ إِلَـٰهٌ غَيْرُ ٱللَّهِ يَأْتِيكُم بِهِ ۗ ٱنظُرْ كَيْفَ نُصَرِّفُ ٱلْـَٔايَـٰتِ ثُمَّ هُمْ يَصْدِفُونَ ﴿٤٦﴾

தூதரே! இந்த இணைவைப்பாளர்களிடம் நீர் கேட்பீராக: “அல்லாஹ் உங்களின் கேட்கும் திறனைப் பறித்து செவிடனாகவும், பார்வையைப் பறித்து குருடனாகவும், எதையும் புரிந்துகொள்ள முடியாதவாறு உங்கள் உள்ளங்களின் மீது முத்திரையிட்டும் விட்டால், அல்லாஹ்வைத் தவிர நீங்கள் இழந்தவற்றைத் திருப்பித் தரும் இறைவன் யார்?” தூதரே! நாம் எவ்வாறு விதவிதமாக அவர்களுக்கு ஆதாரங்களைத் தெளிவுபடுத்துகிறோம் என்பதைக் கவனிப்பீராக! பின்னரும் அவர்கள் அவற்றைப் புறக்கணிக்கிறார்கள்.