அல்-முக்தஸர்
فَلَمَّا نَسُوا۟ مَا ذُكِّرُوا۟ بِهِۦ فَتَحْنَا عَلَيْهِمْ أَبْوَٰبَ كُلِّ شَىْءٍ حَتَّىٰٓ إِذَا فَرِحُوا۟ بِمَآ أُوتُوٓا۟ أَخَذْنَـٰهُم بَغْتَةً فَإِذَا هُم مُّبْلِسُونَ ﴿٤٤﴾
கடுமையான வறுமை மற்றும் நோய் மூலம் அவர்கள் அறுவுறுத்தப்பட்டதை அவர்கள் விட்டு, அல்லாஹ்வின் கட்டளையின்படி செயல்படாமல் இருந்தபோது, கொஞ்சம்கொஞ்சமாக வசதியின் வாயில்களை நாம் அவர்களுக்குத் திறந்துவிட்டோம்; ஏழ்மையின் பின் செல்வத்தையும் நோயின் பின் ஆரோக்கியத்தையும் அவர்களுக்கு வழங்கினோம். இதனால் அவர்களுக்கு கர்வம் ஏற்பட்டபோது, தமக்கு வழங்கப்பட்ட வசதிகளினால் சந்தோசம் அவர்களை ஆட்கொண்ட போது திடீரென நம்முடைய வேதனை அவர்களை அடைந்தது. அதனால் தடுமாற்றத்திலும் விரக்தியிலும் சிக்கிக்கொண்டனர்.