×

الأنعام

வசனம் 38

அல்-முக்தஸர்

وَمَا مِن دَآبَّةٍ فِى ٱلْأَرْضِ وَلَا طَـٰٓئِرٍ يَطِيرُ بِجَنَاحَيْهِ إِلَّآ أُمَمٌ أَمْثَالُكُم ۚ مَّا فَرَّطْنَا فِى ٱلْكِتَـٰبِ مِن شَىْءٍ ۚ ثُمَّ إِلَىٰ رَبِّهِمْ يُحْشَرُونَ ﴿٣٨﴾

ஆதமின் மக்களே! பூமியின் மேற்பரப்பில் நடமாடும் எந்த உயிரினமானாலும், வானத்தில் பறந்து திரியும் எந்த பறவையானாலும் படைப்பிலும் வாழ்வாதாரத்திலும் அவையும் உங்களைப் போன்ற இனங்கள்தாம். லவ்ஹுல் மஹ்ஃபூல் என்னும் ஏட்டிலே பதியாமல் எந்த ஒன்றையும் நாம் விட்டுவைக்கவில்லை. அனைத்தையும் பற்றிய அறிவு அல்லாஹ்விடமே உள்ளது. அவன் பக்கமே மறுமைநாளில் தீர்ப்பிற்காக ஒன்றுதிரட்டப்படுவர். ஒவ்வொருவருக்கும் உரிய கூலியை அவன் வழங்கிடுவான்.