×

الأنعام

வசனம் 28

அல்-முக்தஸர்

بَلْ بَدَا لَهُم مَّا كَانُوا۟ يُخْفُونَ مِن قَبْلُ ۖ وَلَوْ رُدُّوا۟ لَعَادُوا۟ لِمَا نُهُوا۟ عَنْهُ وَإِنَّهُمْ لَكَـٰذِبُونَ ﴿٢٨﴾

திருப்பி அனுப்பப்பட்டால் நம்பிக்கைகொள்வோம் என அவர்கள் கூறுவது உண்மையல்ல. மாறாக தங்களின் வார்த்தையால் தாங்கள் மறைத்துக் கொண்டிருந்ததை வெளிப்படுத்தி விட்டார்கள். அவர்களது உடலறப்புக்கள் அவர்களுக்கெதிராக சாட்சி கூறும் போது, (நாங்கள் இணைவைப்பாளர்களாக இருக்கவில்லை) என்ற அவர்களின் கூற்றின் மூலம், அவர்கள் மறைத்துக் கொண்டிருந்தவை வெளிவந்துவிட்டன. அவர்கள் உலகிற்கு திருப்பி அனுப்பப்பட்டாலும் தடுக்கப்பட்ட ஷிர்க்கான, நிராகரிப்பான செயல்களில்தான் ஈடுபடுவார்கள். நாங்கள் திரும்பினால் நம்பிக்கைகொள்வோம் என்ற தங்களின் வாக்குறுதியில் அவர்கள் நிச்சயமாக பொய்யர்களே.