×

الأنعام

வசனம் 165

அல்-முக்தஸர்

وَهُوَ ٱلَّذِى جَعَلَكُمْ خَلَـٰٓئِفَ ٱلْأَرْضِ وَرَفَعَ بَعْضَكُمْ فَوْقَ بَعْضٍ دَرَجَـٰتٍ لِّيَبْلُوَكُمْ فِى مَآ ءَاتَىٰكُمْ ۗ إِنَّ رَبَّكَ سَرِيعُ ٱلْعِقَابِ وَإِنَّهُۥ لَغَفُورٌ رَّحِيمٌۢ ﴿١٦٥﴾

பூமியை நிர்வகிப்பதற்காக, அதில் உங்களுக்கு முன் வாழ்ந்தவர்களுக்குப் பிறகு உங்களை வழித்தோன்றல்களாக அல்லாஹ்வே ஆக்கினான். உங்களுக்கு வழங்கியவற்றில் உங்களைச் சோதிப்பதற்காக படைப்பிலும் வாழ்வாதாரத்திலும் ஏனைய விடயங்களிலும் உங்களில் சிலரை சிலரை விட உயர்த்தியுள்ளான், தூதரே! உம் இறைவன் தண்டனை வழங்குவதில் விரைவானவன். வரக்கூடிய ஒவ்வொன்றும் அண்மையிலேயே உள்ளன. தன்னிடம் பாவமன்னிப்புக் கோரும் அடியார்களை அவன் மன்னிக்கக்கூடியவன். அவர்களின் விஷயத்தில் அவன் மிகுந்த கருணையாளனாக இருக்கின்றான்.