அல்-முக்தஸர்
أَن تَقُولُوٓا۟ إِنَّمَآ أُنزِلَ ٱلْكِتَـٰبُ عَلَىٰ طَآئِفَتَيْنِ مِن قَبْلِنَا وَإِن كُنَّا عَن دِرَاسَتِهِمْ لَغَـٰفِلِينَ ﴿١٥٦﴾
அரபு நாட்டின் இணைவைப்பாளர்களே!- “தவ்ராத்தையும் இன்ஜீலையும் அல்லாஹ் எங்களுக்கு முன்னிருந்த யூதர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும்தான் இறக்கினான். எங்களுக்கு எந்த வேதத்தையும் இறக்கவில்லை. எங்களது மொழியிலன்றி அவர்களது மொழியில் இருந்ததனால் அவர்களது வேதங்களை எங்களுக்குப் படிக்கத் தெரியவில்லை” என்று நீங்கள் கூறிவிடக்கூடாது என்பதற்காகவே. (இக்குர்ஆனை உங்கள் மீது இறக்கினோம்).