×

الأنعام

வசனம் 151

அல்-முக்தஸர்

قُلْ تَعَالَوْا۟ أَتْلُ مَا حَرَّمَ رَبُّكُمْ عَلَيْكُمْ ۖ أَلَّا تُشْرِكُوا۟ بِهِۦ شَيْـًٔا ۖ وَبِٱلْوَٰلِدَيْنِ إِحْسَـٰنًا ۖ وَلَا تَقْتُلُوٓا۟ أَوْلَـٰدَكُم مِّنْ إِمْلَـٰقٍ ۖ نَّحْنُ نَرْزُقُكُمْ وَإِيَّاهُمْ ۖ وَلَا تَقْرَبُوا۟ ٱلْفَوَٰحِشَ مَا ظَهَرَ مِنْهَا وَمَا بَطَنَ ۖ وَلَا تَقْتُلُوا۟ ٱلنَّفْسَ ٱلَّتِى حَرَّمَ ٱللَّهُ إِلَّا بِٱلْحَقِّ ۚ ذَٰلِكُمْ وَصَّىٰكُم بِهِۦ لَعَلَّكُمْ تَعْقِلُونَ ﴿١٥١﴾

தூதரே! மக்களிடம் நீர் கூறுவீராக: “வாருங்கள், அல்லாஹ் தடைசெய்ததை நான் உங்களுக்கு படித்துக் காட்டுகிறேன்: தனது படைப்புகளில் எவரையும் அவனுக்கு இணையாக ஆக்குவதையும் தாய் தந்தையருடன் முறையற்று நடந்து கொள்வதையும் அவன் உங்களுக்குத் தடைசெய்துள்ளான். மாறாக அவர்களுடன் நல்ல முறையில் நடந்துகொள்ளுங்கள். அறியாமைக்கால மக்கள் செய்தது போன்று வறுமையின் காரணமாக உங்கள் குழந்தைகளைக் கொன்றுவிடாதீர்கள். உங்களுக்கும் அவர்களுக்கும் நாமே உணவளிக்கின்றோம். வெளிப்படையாகவும் இரகசியமாகவும் மானக்கேடான காரியங்களை நெருங்குவதையும், அல்லாஹ் தடைசெய்த ஓர் உயிரை, திருமணத்தின் பின் விபச்சாரத்தில் ஈடுபடல், இஸ்லாத்தை விட்டு மதம் மாறுதல் போன்ற உரிய காரணமின்றி கொல்வதையும் அவன் தடைசெய்துள்ளான். அல்லாஹ்வின் ஏவல்களையும் விலக்கல்களையும் நீங்கள் புரிந்துகொள்ளும் பொருட்டே அவன் மேற்கூறிய அறிவுரையை வழங்கியுள்ளான்.