×

الأنعام

வசனம் 148

அல்-முக்தஸர்

سَيَقُولُ ٱلَّذِينَ أَشْرَكُوا۟ لَوْ شَآءَ ٱللَّهُ مَآ أَشْرَكْنَا وَلَآ ءَابَآؤُنَا وَلَا حَرَّمْنَا مِن شَىْءٍ ۚ كَذَٰلِكَ كَذَّبَ ٱلَّذِينَ مِن قَبْلِهِمْ حَتَّىٰ ذَاقُوا۟ بَأْسَنَا ۗ قُلْ هَلْ عِندَكُم مِّنْ عِلْمٍ فَتُخْرِجُوهُ لَنَآ ۖ إِن تَتَّبِعُونَ إِلَّا ٱلظَّنَّ وَإِنْ أَنتُمْ إِلَّا تَخْرُصُونَ ﴿١٤٨﴾

அல்லாஹ்வின் நாட்டத்தையும் விதியையும் தங்களின் இணைவைப்பு சரி என்பதற்கு ஆதாரமாக்கி இணைவைப்பாளர்கள் கூறுவார்கள்: “அல்லாஹ் நாடியிருந்தால் நாங்களும் எங்கள் முன்னோர்களும் அல்லாஹ்வுக்கு இணைவைத்திருக்கமாட்டோம். நாம் எம்மீது தடைசெய்துகொண்டவற்றை நாம் தடைசெய்யக்கூடாது என அல்லாஹ் நாடியிருந்தால் அதனை நாம் தடைசெய்திருக்கமாட்டோம்.” இவர்களது தவறான வாதம் போன்றவற்றைக் கொண்டே இவர்களுக்கு முன்னிருந்தவர்களும் தங்களின் தூதர்களை நிராகரித்தார்கள். “நாம் அவர்களை நிராகரிக்கக் கூடாது என அல்லாஹ் நாடியிருந்தால் நாங்கள் அவர்களை நிராகரித்திருக்க மாட்டோம்” என்று கூறினார்கள். நாம் அவர்கள் மீது இறக்கிய வேதனையைச் சுவைக்கும் வரை இந்த நிராகரிப்பில் அவர்கள் நிலைத்திருந்தார்கள். தூதரே! இந்த இணைவைப்பாளர்களிடம் நீர் கூறுவீராக: “அல்லாஹ் தனக்கு இணைவைக்கப்படுவதை விரும்புகிறான் அல்லது அவன் தடைசெய்தவற்றை அனுமதிப்பதையும், அனுமதித்ததை தடைசெய்வதையும் அவன் விரும்புகிறான் என்பதற்கு ஏதேனும் ஆதாரம் உங்களிடம் இருக்கின்றதா? நீங்கள் இவ்வாறு செய்வது மாத்திரம் அல்லாஹ் திருப்தியடைந்தான் என்பதற்கான ஆதாரமல்ல. நிச்சயமாக நீங்கள் யூகங்களையே பின்பற்றுகிறீர்கள். சத்தியத்திற்கு முன்னால் யூகம் எப்பயனையும் அளிக்காது. நீங்கள் பொய்தான் கூறுகிறீர்கள்.