அல்-முக்தஸர்
قُل لَّآ أَجِدُ فِى مَآ أُوحِىَ إِلَىَّ مُحَرَّمًا عَلَىٰ طَاعِمٍ يَطْعَمُهُۥٓ إِلَّآ أَن يَكُونَ مَيْتَةً أَوْ دَمًا مَّسْفُوحًا أَوْ لَحْمَ خِنزِيرٍ فَإِنَّهُۥ رِجْسٌ أَوْ فِسْقًا أُهِلَّ لِغَيْرِ ٱللَّهِ بِهِۦ ۚ فَمَنِ ٱضْطُرَّ غَيْرَ بَاغٍ وَلَا عَادٍ فَإِنَّ رَبَّكَ غَفُورٌ رَّحِيمٌ ﴿١٤٥﴾
தூதரே! நீர் கூறுவீராக: “அறுக்கப்படாமல் செத்தது, வழியும் இரத்தம், பன்றியின் இறைச்சி -ஏனெனில் அது அசுத்தமாகும் - சிலைகளுக்காகப் பலியிடப்பட்ட அல்லாஹ்வின் பெயர் கூறி அறுக்கப்படாதது ஆகியவற்றைத் தவிர வேறு எதனையும் இறைவன் எனக்கு வஹி அறிவித்தவற்றில் தடைசெய்யப்பட்டதாகக் காணவில்லை. யாரேனும் கடுமையான பசியினால் நிர்ப்பந்திக்கப்பட்டு - சுவையை நாடாமலும் அவசியமானதை விட அதிகமாகாமலும் - அவற்றை உண்டுவிட்டால் அவர் மீது எந்தக் குற்றமும் இல்லை. தூதரே! உம் இறைவன் நிர்ப்பந்தத்தால் உண்டவர்களை மன்னிக்கக்கூடியவனாகவும் அவர்களின் விஷயத்தில் மிகுந்த கருணையாளனாகவும் இருக்கின்றான்.