×

الأنعام

வசனம் 143

அல்-முக்தஸர்

ثَمَـٰنِيَةَ أَزْوَٰجٍ ۖ مِّنَ ٱلضَّأْنِ ٱثْنَيْنِ وَمِنَ ٱلْمَعْزِ ٱثْنَيْنِ ۗ قُلْ ءَآلذَّكَرَيْنِ حَرَّمَ أَمِ ٱلْأُنثَيَيْنِ أَمَّا ٱشْتَمَلَتْ عَلَيْهِ أَرْحَامُ ٱلْأُنثَيَيْنِ ۖ نَبِّـُٔونِى بِعِلْمٍ إِن كُنتُمْ صَـٰدِقِينَ ﴿١٤٣﴾

உங்களுக்காக அவன் எட்டு வகைகளை படைத்துள்ளான். அவற்றில் செம்மறியாட்டு வகையில் ஆண், பெண் சோடியும் வெள்ளாட்டு வகையில் ஆண், பெண் சோடியும் உள்ளன. தூதரே! நீர் இணைவைப்பாளர்களிடம் கேட்பீராக: “அவன் இரண்டு ஆண் இனங்களை - அவை ஆண் என்பதால் - தடைசெய்தானா?” அவர்கள் ‘ஆம்’ என்று கூறினால், “அவ்வாறெனில் ஏன் நீங்கள் பெண்ணினத்தையும் தடைசெய்கிறீர்கள்? அல்லது பெண் என்பதால் அவற்றைத் தடைசெய்து விட்டானா?” என்று கேட்பீராக. அவர்கள், ‘ஆம்’ என்று கூறினால், ““அவ்வாறெனில் ஏன் நீங்கள் ஆணினத்தையும் தடைசெய்கிறீர்கள்? அல்லது பெண் இனங்களின் கருவில் உள்ளதை அவன் தடைசெய்து விட்டானா?” என்று கேட்பீராக. அவர்கள், ‘ஆம்’ என்று கூறினால், “பெண் இனங்களின் வயிற்றுள்ளதை ஆண் என்றும் பெண் என்றும் வேறுபடுத்தி அவற்றை ஏன் தடைசெய்கிறீர்கள்? இணைவைப்பாளர்களே! அல்லாஹ்வே இத்தடையை விதித்தான் என்ற உங்களின் வாதத்தில் நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் சரியான ஆதாரத்தை எனக்குக் கூறுங்கள்” என்று கேட்பீராக.