அல்-முக்தஸர்
وَهُوَ ٱلَّذِىٓ أَنشَأَ جَنَّـٰتٍ مَّعْرُوشَـٰتٍ وَغَيْرَ مَعْرُوشَـٰتٍ وَٱلنَّخْلَ وَٱلزَّرْعَ مُخْتَلِفًا أُكُلُهُۥ وَٱلزَّيْتُونَ وَٱلرُّمَّانَ مُتَشَـٰبِهًا وَغَيْرَ مُتَشَـٰبِهٍ ۚ كُلُوا۟ مِن ثَمَرِهِۦٓ إِذَآ أَثْمَرَ وَءَاتُوا۟ حَقَّهُۥ يَوْمَ حَصَادِهِۦ ۖ وَلَا تُسْرِفُوٓا۟ ۚ إِنَّهُۥ لَا يُحِبُّ ٱلْمُسْرِفِينَ ﴿١٤١﴾
அல்லாஹ்தான் தண்டுகளுடைய, தண்டுகளற்ற பரந்த தோட்டங்களை பூமியின் மேற்பரப்பில் உருவாக்கினான். அவனே பேரீச்ச மரங்களை முளைக்கச் செய்தான். வடிவத்திலும் சுவையிலும் வேறுபட்ட பழங்களையுடைய பயிர்களையும் அவன் படைத்துள்ளான். அவனே ஆலிவ், மாதுளை ஆகியவற்றை உருவாக்கினான். அவற்றின் இலைகள் ஒன்றுபோல் இருக்கின்றன. சுவையோ வேறுபட்டு இருக்கிறது. மனிதர்களே! அவை விளையும்போது அவற்றின் விளைச்சலை உண்ணுங்கள். அவை அறுவடைசெய்யப்படும்போது அவற்றிற்கு உரிய ஸகாத்தை வழங்கிவிடுங்கள். உண்பதிலும் செலவு செய்வதிலும் மார்க்க வரம்புகளை மீறிவிடாதீர்கள். ஏனெனில் உண்ணவதிலும் செலவளிப்பதிலும் அவயைல்லாத ஏனையவற்றிலும் தன் வரம்புகளை மீறக்கூடியவர்களை அல்லாஹ் நேசிப்பதில்லை. மாறாக அவர்களை வெறுக்கிறான். இவையனைத்தையும் படைத்தவனே தன் அடியார்களுக்காக இதனை ஆகுமாக்கித் தந்துள்ளான். அதனைத் தடைசெய்யும் அதிகாரம் இணைவைப்பாளர்களுக்குக் கிடையாது.