×

الأنعام

வசனம் 135

அல்-முக்தஸர்

قُلْ يَـٰقَوْمِ ٱعْمَلُوا۟ عَلَىٰ مَكَانَتِكُمْ إِنِّى عَامِلٌ ۖ فَسَوْفَ تَعْلَمُونَ مَن تَكُونُ لَهُۥ عَـٰقِبَةُ ٱلدَّارِ ۗ إِنَّهُۥ لَا يُفْلِحُ ٱلظَّـٰلِمُونَ ﴿١٣٥﴾

தூதரே! நீர் கூறுவீராக: “என் சமூகமே! உங்களின் வழிகேட்டிலும் நிராகரிப்பிலுமே நீங்கள் நிலைத்திருங்கள். தெளிவாக எடுத்துரைப்பதன் மூலம் உங்களுக்கு எதிரான ஆதாரங்களைக் நான் நிலைநாட்டிவிட்டேன். இனி உங்களின் நிராகரிப்பையும் வழிகேட்டையும் நான் பொருட்படுத்தப் போவதில்லை. மாறாக சத்தியத்தில் நான் நிலைத்திருப்பேன். இவ்வுலகில் யாருக்கு வெற்றி கிடைக்கும்? இப்பூமியை ஆட்சி செய்வது யார்? யார் மறுமையின் வீட்டைப் பெறுவார்கள்? என்பதை நீங்கள் விரைவில் அறிந்து கொள்வீர்கள். இணைவைப்பாளர்கள் இவ்வுலகிலும் மறுவுலகிலும் வெற்றிபெற மாட்டார்கள். இவ்வுலகில் அனுபவித்தாலும் அவர்களது இறுதி முடிவு இழப்பைச் சந்திப்பதிப்பதே.