×

الأنعام

வசனம் 132

அல்-முக்தஸர்

وَلِكُلٍّ دَرَجَـٰتٌ مِّمَّا عَمِلُوا۟ ۚ وَمَا رَبُّكَ بِغَـٰفِلٍ عَمَّا يَعْمَلُونَ ﴿١٣٢﴾

ஒவ்வொருவருக்கும் அவர்களின் செயல்களுக்கேற்ப படித்தரங்கள் உண்டு. குறைவான அளவில் தீமை செய்தோரும் அதிகமான அளவில் தீமை செய்தோரும் சமமாக மாட்டார்கள். மேலும் பின்பற்றியவர்களும் பின்பற்றப்பட்டவர்களும் சமமாக மாட்டார்கள். அதே போன்று நன்மை செய்வோரின் நன்மைகளும் சமமாக மாட்டா. அவர்கள் செய்துகொண்டிருப்பவற்றை உம் இறைவன் கவனிக்காமல் இல்லை. மாறாக அவற்றை அவன் அறிந்திருக்கிறான். எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை. அவர்களின் செயல்களுக்கேற்ப அவன் அவர்களுக்குக் கூலி வழங்குவான்.