அல்-முக்தஸர்
يَـٰمَعْشَرَ ٱلْجِنِّ وَٱلْإِنسِ أَلَمْ يَأْتِكُمْ رُسُلٌ مِّنكُمْ يَقُصُّونَ عَلَيْكُمْ ءَايَـٰتِى وَيُنذِرُونَكُمْ لِقَآءَ يَوْمِكُمْ هَـٰذَا ۚ قَالُوا۟ شَهِدْنَا عَلَىٰٓ أَنفُسِنَا ۖ وَغَرَّتْهُمُ ٱلْحَيَوٰةُ ٱلدُّنْيَا وَشَهِدُوا۟ عَلَىٰٓ أَنفُسِهِمْ أَنَّهُمْ كَانُوا۟ كَـٰفِرِينَ ﴿١٣٠﴾
மறுமை நாளில் நாம் அவர்களிடம் கூறுவோம்: “மனித, ஜின் சமூகமே! தம் மீது அல்லாஹ் இறக்கியதை உங்களிடம் எடுத்துரைக்கும், மறுமை நாளாகிய இந்த நாளின் சந்திப்பைக் குறித்து எச்சரிக்கை செய்யும் தூதர்கள், உங்கள் இனமான மனிதர்களிலிருந்தே, உங்களிடம் வரவில்லையா? ” அதற்கு அவர்கள், “ஆம். உன் தூதர்கள் எங்களிடம் எடுத்துரைத்தார்கள் என்பதை நிச்சயமாக நாங்கள் ஒத்துக் கொள்கிறோம். இந்நாளின் சந்திப்பையும் ஒத்துக் கொள்கிறோம். ஆயினும் உன் தூதர்களையும் இந்த நாளின் சந்திப்பையும் பொய்யெனக்கூறி நாங்கள் நிராகரித்துவிட்டோம். இவ்வுலகிலுள்ள அழியக்கூடிய அற்ப இன்பங்களும் அலங்காரங்களும் அவர்களை ஏமாற்றிவிட்டன” நாங்கள் உலகிலே அல்லாஹ்வையும் அவனது தூதர்களையும் நிராகரித்து வாழ்ந்தோம் என்று தங்களுக்கு எதிராகவே அவர்கள் சாட்சி கூறுவார்கள். நேரம் முடிவுற்று விட்டதால் அவர்களின் இந்த சாட்சியமும் நம்பிக்கையும் அவர்களுக்கு எந்தப் பயனையும் அளிக்காது.