×

الأنعام

வசனம் 128

அல்-முக்தஸர்

وَيَوْمَ يَحْشُرُهُمْ جَمِيعًا يَـٰمَعْشَرَ ٱلْجِنِّ قَدِ ٱسْتَكْثَرْتُم مِّنَ ٱلْإِنسِ ۖ وَقَالَ أَوْلِيَآؤُهُم مِّنَ ٱلْإِنسِ رَبَّنَا ٱسْتَمْتَعَ بَعْضُنَا بِبَعْضٍ وَبَلَغْنَآ أَجَلَنَا ٱلَّذِىٓ أَجَّلْتَ لَنَا ۚ قَالَ ٱلنَّارُ مَثْوَىٰكُمْ خَـٰلِدِينَ فِيهَآ إِلَّا مَا شَآءَ ٱللَّهُ ۗ إِنَّ رَبَّكَ حَكِيمٌ عَلِيمٌ ﴿١٢٨﴾

தூதரே! அல்லாஹ் மனித, ஜின் இனங்கள் அனைவரையும் ஒன்று சேர்க்கும் நாளை நினைவுகூர்வீராக. பின்னர் அல்லாஹ் அவர்களிடம் கூறுவான்: “ஜின் சமூகமே! நீங்கள் ஏராளமான மனிதர்களை வழிகெடுத்து அல்லாஹ்வின் பாதையைவிட்டும் அவர்களைத் தடுத்துவிட்டீர்கள்” அவர்களைப் பின்பற்றிய மனிதர்கள் தங்கள் இறைவனிடம் பதிலளித்தவாறு கூறுவார்கள், “எங்கள் இறைவா! எங்களில் சிலர் சிலரைக் கொண்டு பயனடைந்தோம் (மனிதனின் கீழ்ப்படிதலைக் கொண்டு ஜின்கள் பயனடைந்தன. தங்களின் மனஇச்சையை நிறைவேற்றியதைக் கொண்டு மனிதர்கள் பயனடைந்தனர்) நீ எங்களுக்கு நிர்ணயித்த தவணையையும் நாங்கள் அடைந்துவிட்டோம். இது மறுமை நாளாகும்.” அல்லாஹ் கூறுவான்: “நரகம்தான் உங்களின் தங்குமிடமாகும். அல்லாஹ் நாடிய காலத்தைத் தவிர இங்கு நீங்கள் நிரந்தரமாக வீழ்ந்து கிடப்பீர்கள்,” நரகத்தில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள் என்பதிலிருந்து அளிக்கப்பட்ட விதிவிலக்கு, தமது அடக்கஸ்தலத்திலிருந்து நரகம் செல்லும் வரைக்கும் உள்ள காலமாகும். தூதரே! உம் இறைவன் தான் நிர்ணயித்த விதிகளில், தன் நிர்வாகத்தில் ஞானம்மிக்கவன். தன் அடியார்களையும் அவர்களில் யார் வேதனைக்குத் தகுதியானவர்கள் என்பதையும் அவன் நன்கறிந்தவன்.