×

الأنعام

வசனம் 12

அல்-முக்தஸர்

قُل لِّمَن مَّا فِى ٱلسَّمَـٰوَٰتِ وَٱلْأَرْضِ ۖ قُل لِّلَّهِ ۚ كَتَبَ عَلَىٰ نَفْسِهِ ٱلرَّحْمَةَ ۚ لَيَجْمَعَنَّكُمْ إِلَىٰ يَوْمِ ٱلْقِيَـٰمَةِ لَا رَيْبَ فِيهِ ۚ ٱلَّذِينَ خَسِرُوٓا۟ أَنفُسَهُمْ فَهُمْ لَا يُؤْمِنُونَ ﴿١٢﴾

தூதரே! அவர்களிடம் கேட்பீராக: “வானங்கள், பூமி, அவையிரண்டிற்கு இடையில் உள்ளவை ஆகியவற்றின் உரிமை யாருக்குரியது? நீர் கூறுவீராக: அனைத்தின் உரிமையும் அல்லாஹ்வுக்கே உரியது. அடியார்கள் மீது அருள் புரிவதற்காக கருணையை தன்மீது விதித்துக் கொண்டான். எனவேதான் அவர்களை உடனுக்குடன் தண்டித்துவிட மாட்டான். அவர்கள் பாவமன்னிப்புக் கோரவில்லையெனில் அவர்கள் அனைவரையும் மறுமைநாளில் ஒன்றுதிரட்டுவான். அந்த நாள் வருவதில் எந்த சந்தேகமும் இல்லை. அல்லாஹ்வை நிராகரித்து அழிவுக்கான காரணிகளைத்தேடி தங்களுக்குத் தாங்களே இழப்பை ஏற்படுத்திக் கொண்டவர்கள் நம்பிக்கைகொள்ள மாட்டார்கள்.